முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்ந்த இரு வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு உழவு இயந்திரங்களும் நட்டாங்கண்டல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பறங்கியாறு ஆற்றுக் கிடக்கை பகுதியில் ம ண் அகழ்வில் ஈடுபட்ட நிலையிலேயே இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நட்டாங்கண்டல் இரகசிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல பொலிஸார் அனுமதியளித்துள்ளனர்.
குறித்த இரு சாரதிகளையும் மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.