Home Uncategorized மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படத்தின் விமர்சனம் இதோ !!

மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படத்தின் விமர்சனம் இதோ !!

படத்தின் துவக்கமே, கதாநாயகனின் தந்தை வங்கியில் பெற்ற ரூ.15 ஆயிரத்தை கட்ட முடியாமல், கதாநாயகனின் தாய், தந்தை இருவருமே லெட்டர் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த கடிதத்தில் ரூ.1 வைத்து இதுதான் எங்களால் உனக்கு கொடுக்க முடிந்தது என விட்டு செல்கின்றனர். இப்போது பெற்றோர்கள் விட்டுசென்ற அந்த 1 ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் நாயகன், கட் செய்தால் அமெரிக்காவில் NRIஆக பைனான்ஸ் கம்பெனி வைத்துக் கொண்டு ஜரூராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நாயகனையே ஏமாற்றி சுமார் பத்தாயிரம் டாலர்களை ஆட்டையை போடும் நாயகி. நீ கொடுக்காவிட்டாலும் இந்தியாவில் உள்ள உன் தந்தையிடம் வாங்கி காட்டுகிறேன் என சபதம் விட்டு, இந்தியா வருகிறார் நாயகன். இதற்கு பிறகு கடனை வசூலித்தாரா? வேறு ஏதும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாரா? என்கிற விஷயமே முழுக்கதை.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் சுமார் இரண்டரை வருடம் கழித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. வாங்க படம் எப்படி என விமர்சனத்திற்குள் செல்வோம். நடிகர்களை பொறுத்தவரை மகேஷ் பாபு இந்த படத்தை ஓரளவு பார்க்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் இவர்தான். தனது ரசிகர்களை மட்டுமாவது திருப்தி படுத்தும் அளவிற்கு இப்படத்தை தாங்கி பிடித்துள்ளார். சமீபத்தில் சாணிக் காயிதம் படத்தில் நம்மை மிரட்டிய நாயகி கீர்த்தி சுரேஷ் அழகில் கவர்ந்தாலும் பெரிய அளவிற்கு வாய்ப்பு இல்லை. வழக்கம்போல் பெயரளவில் வந்து செல்கிறார். இவர்களை தவிர வெண்ணிலா கிஷோர் சிறிது நேரம் வந்தாலும் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறார். இதுதவிர மற்ற அனைத்து கதாப்பாத்திரங்களுமே சொதப்பல் ரகம் தான். அதிலும் வில்லன் பாத்திரம் படு மட்டமாகவும், சகிக்க முடியாத அளவிற்கும் தான் இருக்கிறது. இத்தனைக்கும் வில்லன் சமுத்திரக்கனி.

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை கமர்சியல் மசாலா படங்களுக்கு எப்படி கலர்புல்லாக ஒளிப்பதிவு இருக்க வேண்டுமோ அதை குறையில்லாமல் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதி. தமனின் இசையில் ஓரிரு பாடல்கள் ரசிக்கும் படி இருந்தாலும், பின்னணி இசையில் காதை கிழிக்கும் படி இருக்க வேண்டும் என மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் என நினைக்கிறன். மார்தன்ட் K. வெங்கடேஷின் கட்ஸ் பாடல்கள், சண்டைக் காட்சிகளில் ஓரளவு ரசிக்க வருகிறது.

இப்படத்தின் குறையாக தெரிவது, எதைனு சொல்ட்றது முக்கால்வாசி குறையாகத்தான் தெரிகிறது. இயக்குனர் பரசுராம் எடுத்துக்கொண்ட ஒன் லைன் கதையோ இந்த காலத்திற்கு தேவையான களம் தான் ஆனால் அதை திரைக்கதையுடன் முளுப்படமாக மாற்ற முழுக்க முழுக்க தடுமாறியிருக்கிறார். ஹீரோவை தவிர எந்த ஒரு கதாப்பாத்திரமும் முறையாக எழுதப்படவில்லை. மேற்கண்டது போல் வில்லன் பாத்திரம் படு மோசமாக இருந்ததால் படம் அங்கேயே படுத்து தான், மகேஷ் பாபு தான் ஆங்காங்கே தட்டி எழுப்புகிறார் ஆனால் எழுந்த பாடில்லை.

அதைவிட படத்தில் எந்தவொரு காட்சியிலும் சுத்தமாக நம்பகத்தன்மை இல்லை, உதாரணம், பெற்றோர்கள் இறந்தவுடன் ஒரு ரூபாயுடன் வீட்டை விட்டு செல்லும் நாயகன் அமெரிக்காவில் வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறார். MP-யின் மகளாக வரும் நாயகி நாயகனிடம் ஏமாற்றி பணத்தை வாங்குகிறார். அதாவது பரவாயில்லை இந்த பணத்தை வாங்க இந்தியா வரும் நாயகன் MP வீடு, அலுவலகம் என ரவுண்டு கட்டி அடிக்கிறார். அதிலும் SBI வங்கிக்குள் சென்று மேனேஜரை மிரட்ட, மேனேஜர் கைகட்டி பயந்து பம்முகிறார். இத்தனைக்கும் நாயகன் எந்தவொரு உயர்பதவியிலோ எதிலும் இல்லை, அவர் ஒரு சாதரண குடிமகன் தான். யப்பா சாமி! இதெல்லாம் சின்ன குழந்தைகள் பார்த்தாலே சிரித்து விடும் அப்படிதான் இருக்கிறது முழு படமும். அதாவது ஹீரோவிற்கு பில்டப் கொடுக்க எப்படி வேண்டுமாலும் வைக்கலாம் என மனதில் தொன்றியதை எல்லாம் வைத்துள்ளனர், மகேஷ் பாபுவும் நடித்துள்ளார். இறுதியாக படம் எப்படி என்றால்? மகேஷ் பாபுவின் தீவிர ரசிகர்களுக்கு கூட இப்படம் பிடிக்குமா? எனபது கேள்விக்குறியே அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள், முடிவு உங்கள் கையில்…

(இப்படம் தமிழ்நாட்டில் நேரடியாக தெலுங்கிலே, ஆங்கில சப்டைட்டிலுடன் வெளியாகியுள்ளது).