அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகியதாக வெளியான தகவலை அடுத்து பட்டாசுகள் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக மைனா கோ கம என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,மகிந்த தொடர்பில் வெளியான போலி தகவலையடுத்து பட்டாசு கொளுத்தி போராட்டக்காரர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.
இதேவேளை, பிரதமரின் தனிப்பட்ட ஊழியர்களும், பிரதமரின் வசம் உள்ள ஏனைய அதிகாரிகளும் அலரிமாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.