Home Local news போரை வென்றதாக மார்பு தட்டியவர்கள்!! இன்று பெற்றோல் வரிசையில் நேர்ந்த பரிதாபம்

போரை வென்றதாக மார்பு தட்டியவர்கள்!! இன்று பெற்றோல் வரிசையில் நேர்ந்த பரிதாபம்

கடற்படையில் கடமையாற்றும் போது விடுதலைப் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் அங்கவீனமடைந்த கடற்படை வீரருக்கு அவரது காலில்லாத தாயை சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என்ற சோகமான செய்தி சூரியவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

கடற்படையில் கடமையாற்றிய கம்பஹா சூரியவெவ, வல்சபுகல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான கே.ஆர்.பிரியந்த, என்ற கடற்படை வீரர் 2006 ஆம் ஆண்டு புலிகளின் கிளைமோர் குண்டுத் தாக்குதலில் அங்கவீனமடைந்து சேவையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் சூரியவெவ பிரதேச செயலாளரின் கடிதத்துடன் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று பெற்றோல் கேட்டபோது எரிபொருள் வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

நான் நாட்டுக்காக போருக்கு சென்று குண்டுத்தாக்குதலில் காலினை இழந்துள்ளேன். இன்று எனது அம்மாவை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வழியில்லை. சூரியவெவ பிரதேச செயலாளரிடம் அம்மாவின் மருத்துவப் பதிவுகளுடன் கடிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு எரிபொருள் நிலையத்துக்குச் சென்றேன். சூரியவெவ ஓ.ஐ.சி. அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவரிடம் கூறினார். யாரும் கவலைப்படவில்லை. எண்ணெய் கொடுக்க முடியாது என்றார்கள்.

உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காகச் சேவை செய்தோம் என்பதில் இன்று எந்த அர்த்தமும் இல்லை என்று நான் உணர்கிறேன். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும்போது இப்படித்தான் நடத்தப்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார்.

(Lankadeepa)

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் தட்டுப்பாட்டில் எரிந்துபோன மனிதாபிமானம்
Next articleஇன்றைய ராசிபலன் – 05/07/2022, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்