Home Cinema போனி கபூர் செய்த வேலையால் கடுப்பில் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

போனி கபூர் செய்த வேலையால் கடுப்பில் அஜித் ரசிகர்கள் !! வெளியான அதிர்ச்சி உண்மை இதோ

பாலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தமிழிலும் படங்களை தயாரிக்க முடிவெடுத்தார். அதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தார். இப்படத்தை சதுரங்க வேட்டை மற்றும் தீரன் படங்களை இயக்கிய வினோத் இயக்கினார்.

மேலும் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்தார்கள். வலிமை படத்தின் மூலம் மீண்டும் இணைந்த இவர்கள் தற்போது முன்றாவது முறையாக AK62 படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் விட போனி கபூர் தாமதம் காட்டியதால் அஜித் ரசிகர்கள் சற்று வருதத்தில் இருந்தனர். அஜித்தின் படம் மூன்று வருடங்களுக்கு மேல் வெளியாகாமல் தாமதமானதால் வலிமை படக்குழு மீது அதிருப்தியில் இருந்தனர் அஜித் ரசிகர்கள். ஒருவழியாக வலிமை கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ak61 படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. எனவே அஜித்தின் பிறந்தநாளன்று இப்படத்தின் அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் போனி கபூரின் மீது அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் போனி கபூர் AK 61 படத்தை தொடர்ந்து உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆர்.ஜெ.பாலாஜியின் வீட்ல விசேஷங்க ஆகிய படங்களையும் தயாரித்து வருகின்றார்.

இதில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படம் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இதனை போனி கபூர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு அப்டேட் விடாமல் ஏமாற்றிவிட்டிர்கள் என போனி கபூரை சாடி வருகின்றனர். மேலும் போனி கபூர் எப்போது ட்வீட் போட்டாலும் அஜித் ரசிகர்கள் அவரை சீண்டுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

இருப்பினும் வலிமை படம் போல் இல்லாமல் ak61 படத்தின் அப்டேட் தாமதிக்காமல் வெளியாகும் என்று நினைத்திருந்த ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.