இலங்கை பொலிஸ் சேவை, பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட 2261 எனும் வர்த்தமானி அறிவித்தலின் படி இப்பதவிகளுக்கான விண்ணப்பம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில் அது தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.