பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குழுவொன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறின் போது இடம்பெற்ற தாக்குதலின் போதே குறித்த 34 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.
விடுமுறையில் தனது ஊருக்குச் சென்றிருந்த குறித்த கான்ஸ்டபிள் நேற்றிரவு (17) வர்த்தக நிலையமொன்றுக்கு சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவின் கசாகல பொலிஸ் சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்த நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சகோதரர் காயமடைந்து கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.