Home Accident News பொலிசார் துரத்தி சென்ற டிப்பரால் விபரீதம்!! 7 பேர் வைத்தியசாலையில்

பொலிசார் துரத்தி சென்ற டிப்பரால் விபரீதம்!! 7 பேர் வைத்தியசாலையில்

யாழ்.நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் கோவில் திருவிழாவுக்காக கூடியிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மணல் கடத்தல் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தில் பொலிஸார் வழிமறித்த டிப்பர் வாகனம் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி வழியாக தப்பி ஓடியுள்ளது.

இதன்போது பொலிஸார் துரத்திச் சென்றிருந்த நிலையில் நெல்லியடி மாலுசந்தி பிள்ளையார் கோவிலில் சப்பற திருவிழாவுக்கு கூடியிருந்த மக்கள் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.

சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர், இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநள்ளிரவில் சீருடையினருக்கு கொள்கலன்களில் எரிபொருள்..! யாழ்ப்பாணத்தில் நடக்கும் இருட்டு வியாபாரம்
Next articleஎரிபொருள் வரிசையில் காத்திருந்த வைத்தியர் மற்றும் சுகாதார ஊழியர் மீது சரமாரி தாக்குதல்