Home Uncategorized பெருத்த தொகை கொடுத்து SK-வின் டான்.! சேட்டிலைட், டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனங்கள்

பெருத்த தொகை கொடுத்து SK-வின் டான்.! சேட்டிலைட், டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய நிறுவனங்கள்

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த டான் திரைப்படம் இன்று உலகம் முழுவது திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனவைரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், எமோஷனல் கலந்த காமெடி படம் என்று கூறி வருகிறார்கள்.

இந்த படத்தை இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே .சூர்யா, ஷிவாங்கி, சூரி, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தின் ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, படம் வெளியாகி 30 நாட்களுக்கு பிறகு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. படத்தில் தொலைக்காட்ச்சி உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாம்.