Home Anuradapura பெண்ணொருவரின் மோசடி; 12 சைக்கிள்கள் மீட்பு

பெண்ணொருவரின் மோசடி; 12 சைக்கிள்கள் மீட்பு

அநுராதபுரம் நகரில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக, பூட்டப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரை, அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம், புதுபுர என்ற இடத்தைச் சேர்ந்த 34 வயதான ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சந்தேக நபரான இப் பெண் திருடியதாக கூறப்படும் 12 சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்படும் சைக்கிள்களின் நிறத்தை மாற்றி வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபரான பெண்ணின் கணவர் போதை வஸ்துக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வத்தளையில் கரை ஒதுங்கிய சடலம்
Next articleதுப்பாக்கிச்சூட்டில் 20 வயது இளைஞன் பலி