Home jaffna news புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பட்டபகலில் மோட்டார் சைக்கிள் கொள்ளை

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பட்டபகலில் மோட்டார் சைக்கிள் கொள்ளை

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் வைத்து பெண் ஒருவரின் உந்துருளியினை திருடிசென்ற திருடன் ஒருவன் சென்ற வழியில் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் புதுக்குடியிருப்பு முருகன் ஆலயத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பெண்களுக்கான உந்துருளி ஒன்றினை திருடன் கொள்ளையிட்டு சென்றுள்ளான்,

கொள்ளை சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த உந்துருளியினை தலைக்கவசம் எதுவும் அணியாமல் கேப்பாபிலவு வீதியால் உந்துருளி ஓட்டிச்சென்ற கொள்ளையன் தொடர்பில் அந்த வீதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.சிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

கொள்ளையன் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் யாராவது அருகில் உள்ள பொலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.