தமிழ் நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்தில் ‘வலிமை’ படத்தின் பிளாக்பஸ்டர் ஜோடி – எச் வினோத் மற்றும் போனி கபூர் ஜோடி சேர்ந்துள்ளார். படத்திற்கு தற்காலிகமாக ‘AK61’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.
வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் தமிழ் புத்தாண்டுடன் வலிமை படம் வெளியாகி 50 வது நாளை நிறைவு செய்ய உள்ளது.இதே தினங்களில் பீஸ்ட், கே.ஜி.எஃப் சாப்டர் 2 படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இந்த படங்கள் ரிலீஸ் ஆனாலும் வலிமை படம் கணிசமான அளவில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் செலலூரில் உள்ள கோபுரம் சினிமாஸ்ஸில் வலிமை படம் 50 வது நாளை நிறைவு செய்ய உள்ளது.இதற்கான போஸ்டர்கள் மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா முக்கிய தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார்.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்தது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வலிமை சூப்பர் ஹிட் ஆக்ஷன். நான்காவது வாரத்தை எட்டிய இப்படம் இன்னும் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுத்து வருகிறது. வலிமை திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்கிறது, மேலும் படத்தை மீண்டும் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். வலிமையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.