விஜய்யின் ‘பீஸ்ட்’ பட கிளைமேக்ஸ் காட்சிகள் குறித்து விமான படை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. திரைக்கதையில் நெல்சன் கோட்டைவிட்டு விட்டதாக விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர். கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் வித்தியாசமான படமாக ‘பீஸ்ட்’ இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
I have so many questions…. pic.twitter.com/zVafb6uAnm
— sajan (@sajaniaf) May 15, 2022
இந்நிலையில், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகள் சிலர் பீஸ்ட் க்ளைமாக்சை கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கேப்டன் சிவராமன் சஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் வீடியோவை பகிர்ந்து, இந்த வீடியோவில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளது. இந்திய சினிமாவில் இது போன்ற காட்சிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. என்ன தான் சினிமா என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா.?
ஒரு பெரிய நடிகரின் படத்தின் கதையில் இப்படியா செய்வது. இது போன்ற போர் விமானங்களை சாதாரண மக்களால் கையாள முடியாது. ஆனால் விஜய் சர்வ சாதாரணமாக இயக்குவதாக காட்டப்பட்டுள்ளது ஓவராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் நவம் திரிபாதி என்பவர், விஜய் ஜெட் விமானம் ஓட்டும் போட்டோவை குறிப்பிட்டு, ஜெட் விமானத்தில் மில்டன் பாட்டில் எப்படி வந்தது என கேட்டு கலாய்த்துள்ளார். ஏற்கனவே இந்த காட்சிகளை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கண்டமேனிக்கு கலாய்த்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.
The real Indian Air Force personnel are questioning the ILLOGICAL scenes in #Beast movie.
— Manobala Vijayabalan (@ManobalaV) May 16, 2022