நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட் ’ ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெறுகிறது மற்றும் இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள படம் பீஸ்ட். பல எதிர்ப்பார்ப்புகளில் வெளியான இப்படம் படுமோசமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் பெற்று வருகிறது.
முதல் நாள் முதல் காட்சி முதலே ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துடன் தியேட்டரில் இருந்து வெளியேறி வருகிறார்கள். மேலும் சமுகவலைத்தலத்தில் விஜய் மற்றும் நெல்சனை எல்லையில்லாத அளவிற்கு கலாய்த்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தினை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் நெல்சனை பார்த்து புலம்பித்தள்ளியுள்ளனர். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர் ஸ்டாரின் தலைவர் 169 படத்தில் கமிட்டாகினார்.
நல்ல கதை களத்துடன் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் பீஸ்ட் படத்தை போல பண்ணாமல் ஆகஸ்ட் வரை டைம் இருக்கு நெல்சா கொஞ்சம் பார்த்து பண்ணு என்று கெஞ்சியும் வருகிறார்கள்.ரஜினிகாந்த் கூடிய சீக்கிரமே அமெரிக்கா செல்லவுள்ளதால் அவர் திரும்பி வரும் வரையில் எந்த அப்டேட்டும் இருக்காது என்றும் கூறப்படுகிறது பிரபல சினிமா பிரமுகரான இட்ட ட்வீட் இதோ !!
Super Star #Rajinikanth is watching #Beast now in Sun Tv office…
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 13, 2022
இதை பார்த்த ரசிகர்கள் ரஜினியின் அடுத்த படம் ட்ராப் என சொல்லி கூச்சலிட்டு வருகின்றனர் .