Home Cinema ‘பீஸ்ட்’ : ஒரே நாளில் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டதால் படக்குழு அதிர்ச்சி! நீங்களே பாருங்க !!

‘பீஸ்ட்’ : ஒரே நாளில் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டதால் படக்குழு அதிர்ச்சி! நீங்களே பாருங்க !!

நெல்சன் இயக்கத்தில் விஜய் னைத்து நேற்று வெளியான படம் ‘பீஸ்ட்’. மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் பீஸ்ட் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்ட ஒரே நாளில் பீஸ்ட் படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக பீஸ்ட் படத்தை அந்நாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

max

அதில் கூறியிருப்பதாவது: பிரிமியர் ஷோவில் போதிய வரவேற்பை பெறாததன் காரணமாகவும், மேற்கொண்டு திரையிட்டால் வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதாலும், பீஸ்ட் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. சில இடங்களில் பீஸ்ட் படத்துக்கு பதிலாக கே.ஜி.எஃப் 2 படம் திரையிடப்பட உள்ளது.

பிரான்ஸில் உள்ள பேமஸான தியேட்டர்களில் கூட நிறைய காட்சிகள் ஹவுஸ்புல் ஆகாததால் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம். இத்தகையை முடிவு எடுப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், அஜித்தின் விவேகம், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், ரஜினியின் கோச்சடையான் போன்ற படங்களும் இத்தகையை சூழலை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்