பரிப்புவா போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொன்கடவல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.