Home Local news பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஆண் சிற்றூழியர்கள்: பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டு!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஆண் சிற்றூழியர்கள்: பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டு!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் ஒருவர், ஆண் சிற்றூழியர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தகுதி குறைந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளில் உதவுவதற்காக சமீபத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிற்றூழிர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்டச் செயலகம் தனியான திணைக்கள விசாரணையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.

முறைப்பாடு செய்தவர்களிடமும், பிரதேச செயலக அதிகாரிகள் பலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஏற்கனவே மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.