Home Local news பாண் வியாபாரி ஒருவரின் மனிதாபிமானம்

பாண் வியாபாரி ஒருவரின் மனிதாபிமானம்

ஒரு பாண் வியாபாரி தனது ஒரு நாள் முதலீட்டை போராட்டத்திற்கு அர்ப்பணித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பாண் விற்பனை செய்யும் நபர் ஒருவர் இன்று (6) விற்பனை செய்வதற்கு கொண்டு வந்த பாண் மற்றும் பணிஸ் அனைத்தையும் போராட்டத்திற்கான தனது பங்களிப்பு என்று கூறி பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.

மாணவர்கள் பணம் கொடுத்தும் பணத்தை வாங்க மறுத்து இது என் நாட்டிற்கானதும் உங்களுக்கும் என்னால் முடிந்த பங்களிப்பு என்று கூறினார்.