இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும், சிவப்பு நிறத்திலான காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கினிகத்தேனை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பிரதேசத்தில் வைத்தே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், எவருக்கும் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த கினிகத்தேனை பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.