Home Local news பதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்! வெளியானது அறிவிப்பு

பதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்! வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) பதவி விலகுவதாக அறிவித்ததுடன், தனது இராஜினாமா கடிதத்தை கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக செய்தி வெளியானது.

பின்னர், அவர் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், சபாநாயகர் இன்று ஜனாதிபதியின் இராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில், அரசியலமைப்பின் 37 – 1 ஆம் சரத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாத்திரம் கூறினார்.

பதில் ஜனாதிபதியாக கோட்டாபயவால் ரணில் நியமனம்! வெளியானது அறிவிப்பு

எனினும், ஜனாதிபதியின் இராஜினாமா, மற்றும் இராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் வாய்திறக்கவில்லை.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம்; மேல் மாகாணத்தில் ஊரடங்கு – பிரதமர் உத்தரவு
Next articleஇலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக்கு நேர்ந்த கதி