Home Local news நேற்றைய சம்பவங்களில் 84 பேர் காயம்!! துப்பாக்கி, தோட்டாக்கள் போராட்டக்காரர்கள் வசம்

நேற்றைய சம்பவங்களில் 84 பேர் காயம்!! துப்பாக்கி, தோட்டாக்கள் போராட்டக்காரர்கள் வசம்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற போராட்டங்களின்போது, காயமடைந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நேற்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதன்போது, காயமடைந்த இரண்டு பொலிஸார் உட்பட 84 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றம் அருகே, பத்தரமுல்லை -பொல்துவ சந்தியில் இராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நேற்று (13) மோதல் ஏற்பட்டது.

இதன்போதே, மேற்படி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதனியாக வசித்த திருமணமாகாத பெண் குத்திக்கொலை!
Next articleMarketing on a Global Scale While Working From Home