நீர்க்கொழும்பு எவென்ரா கார்டன் உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
29 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் கடற்படையில் சிவில் அதிகாரியாக செயற்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் உணவக வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலின் போது ஏற்பட்ட அதிக புகையினை சுவாசித்த காரணத்தினால் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.