நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக அவசரகாலச் சட்டம் பிரகடனப் படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த அவசரகாலச் சட்டத்தினால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தன்னிச்சையாக கைது செய்து காவலில் வைக்க காவல்துறைக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
“எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டு மக்களை பயம் மற்றும் வன்முறையைத் தவிர வேறெதுவும் இல்லாமல் அடக்க மாட்டீர்கள். என கோட்டாபய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த அவசரக்கால சட்டத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் நாட்டில் எந்த தீர்வும் கிடைக்கபோவதில்லை என சஜித் பிரேசதாச டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Under no circumstances @GotabayaR will you hold this country down with nothing but fear & violence. The state of emergency runs counter to seeking any solution to the crisis. JUST RESIGN. https://t.co/15bRKrkfAK
— Sajith Premadasa (@sajithpremadasa) May 6, 2022