Home மட்டக்களப்பு செய்திகள் தோட்ட வளாகத்தில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு – தாளங்குடாவில் சம்பவம்

தோட்ட வளாகத்தில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு – தாளங்குடாவில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தாளங்குடாவில் தோட்ட வளாகத்திலிருந்து நேற்று(24) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குவாரி வீதி கல்முனை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அரச்ரெத்தினம் தங்கவடிவேல் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள தனது சகோதரர்களுடன் தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் சம்பவ தினத்தன்று தனது தோட்டத்தில் உள்ள வேலைகளை முடித்து விட்டு நித்திரைக்கு சென்றதாகவும் பின்னர் மறுநாள் காலை அவரின் சகோதரன் அவரின் படுக்கை அறைக்கு தேடிச்சென்றபோது மரணமான நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஐந்து வயது சிறுமியை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவு!! துஷ்பிரயோகம் செய்தவருக்கு மரண தண்டனை விதியுங்கள் – பாதிக்கப்பட்ட சிறுமி நீதிபதியிடம் கோரிக்கை
Next articleயாழ். எரிபொருள் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞன்; முகாமையாளர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு!