Home Cinema திருமண ஆன ஒரே வாரத்தில் பிரிந்த ஜோடிகள் ரசிகர்கள் அதிர்ச்சி !!

திருமண ஆன ஒரே வாரத்தில் பிரிந்த ஜோடிகள் ரசிகர்கள் அதிர்ச்சி !!

இந்தி திரையுலகில் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நடிகர் ரன்பீர் கபூர் -ம் நடிகை ஆலியா பட்-உம் பெற்றோர்களின் சம்மதத்திற்கு பிறகு கடந்த 14 ஆம் தேதி மும்பையில் பிற்பகல் மூன்று மணியளவில் பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது. இவர்களின் திருமண சடங்குகள் பஞ்சாபி முறைப்படி நடந்து முடிந்து இருக்கிறது.

இவர்களுடைய திருமணத்தில் 50 வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டதாகவும், இதில் இத்தாலியன், பஞ்சாபி, மெக்சிகன், ஆப்கான் உணவு வகைகள் பிரதான இடம் பெற்று இருந்ததாக சொல்லப்பட்டது.

நீது கபூர் தனது மகனுடைய திருமணத்திற்காகவே டெல்லி மற்றும் லக்னோவில் இருந்து சமையல் கலைஞர்களை வரவைத்ததாக கூறப்பட்டது. மேலும் ஆலியா பட் சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவார் என்பதால் 25 வகையான சைவ உணவுகளை ஏற்பாடும் செய்திருந்தார்.

மேலும் இத்திருமணத்தின் புகைப்படங்களை ஆலியா பட் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதனை கண்டு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் வந்தனர்.

இதன் இடையில் திருமணம் நடந்து முடிந்து ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் ஆலியா பட் தனது தொழில் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தனது அடுத்த படத்தின் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படப்பிடிப்புக்காக ரன்பீரை கரம் பிடித்த ஒரு வாரத்தில் முதன் முறையாக தனது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியும் வருகிறது.

மேலும் ஆலியா பட் படப்பிடிப்புக்காக தான் கிளம்பி இருக்கிறார் என்ற செய்தியை அறிந்த புகைப்படக்காரர்கள் விமான நிலையத்தில் மலமலவென குவிந்து இருக்கின்றனர்.

இதனையடுத்து பிங்க் நிற உடையணிந்து வந்த ஆலியா கையில் திருமண மோதிரமும் கைகளில் இட்ட மெஹந்தியும் காட்சியளித்தது. இவரைப்போலவே ஆலியா பட்-ன் கணவரும் நடிகருமான ரன்பீர் கபூர் கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய பணி நிமித்தம் காரணமாக டி-சீரிஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleAK61 படத்தை பற்றி வெளியான சுவாரசியமான தகவல் இதோ !! இது எப்ப நடந்துச்சு ? ரசிகர்கள் அதிர்ச்சி
Next article8 வருடத்திற்கு பின் நானியுடன் நஸ்ரியா நடித்த அடடே சுந்தரா படத்தின் டீஸர் இதோ !!