Home திருகோணமலை செய்திகள் திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம்

திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம்

திருகோணமலை மொரவெவ பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இப் போராட்டமானது இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்குபற்றியுள்ளனர்.

எரிவாயு இல்லை, எரிபொருள் இல்லை, மருந்துபொருட்கள் இல்லை மக்களால் இந்த நாட்டில் வாழ முடியவில்லை. இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி மக்களும் இணைந்து கொண்டுள்ளதுடன் மூவின மக்களும் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இப் போராட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறும், அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலை இன்று அரசியல் நெருக்கடியாக மாறி மக்கள் தற்போது அரசாங்கத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் முன்னெடுக்கப்படும் பொதுஜன போராட்டம் சர்வதேச நாடுகளையும் எமது நாட்டின் நிலை தொடர்பில் கவனத்தை ஈர்த்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம் திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம் திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம் திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம் திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம் திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவலிமை படத்தை ட்ரோல் பண்ணும் போது எங்கய்யா போன்னிங்க ? சாந்தனுவை வச்சு செய்த அஜித் ரசிகர்கள்!
Next articleவடக்கின் போர் ஆரம்பம்