Home Cinema திடீரென ட்விட்டர் டிபியை மாற்றிய ரஜினிகாந்த் !! சமரசம் செய்த நபர் யார் ? பின்னணி...

திடீரென ட்விட்டர் டிபியை மாற்றிய ரஜினிகாந்த் !! சமரசம் செய்த நபர் யார் ? பின்னணி என்ன?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பெரும்பாலும் பீஸ்ட் படத்துக்கு எதிர்மறை கருத்துக்களே அதிகம் கிடைத்தன.

இதன் ஒரு பகுதியாக பீஸ்ட் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தனக்கு படம் பிடிக்கவில்லை என்பதால் இயக்குநரை மாற்ற முடிவெடுத்துவிட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.

திடீரென ட்விட்டர் டிபியை மாற்றிய ரஜினிகாந்த் !! சமரசம் செய்த நபர் யார் ? பின்னணி என்ன?

இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கிய படங்களான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ படங்களின் வரிசையில் ‘தலைவர் 169’ படத்தையும் இணைத்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவர் 169’ பட அறிவிப்பு படத்தை பதிவேற்றியுள்ளார். இதனால் ‘தலைவர் 169’ படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது.

‘தலைவர் 169’ படத்துக்கு அனிருத் இசையமைப்பது மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தத் தகவல்களும் தெளிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அண்ணாத்தே படம் முடிந்த பின்பு மீண்டும் சன் பிக்ச்சர் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதியப்படம் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது, இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் படு தோல்வியை அடைந்து மண்ணை கவ்வியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு கட்சி நடிகர் ரஜினிகாந்துக்கு போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

படத்தை பார்த்த ரஜினிகாந்த் செம்ம டென்ஷனில் தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையில் தனது புதிய படத்துக்கான இயக்குனரை மாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனிருத் சிபாரிசில் ரஜினிகாந்த் இரண்டு மகள்களின் மூலம் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி மகள்களின் வற்புறுத்தல் காரணமாக ரஜினிகாந்த் புதிய படத்துக்கு நெல்சனை ஓகே செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின்னனியில் அனிருத் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பீஸ்ட் படம் வெளியான பின்பு அனிரூத் மற்றும் இரண்டு மகள்கள் மீது செம்ம கோபத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது ரஜினி புதிய படத்தில் தன்னை மாற்றி விடாமல் இருக்க, அனிரூத் உதவியை நாடியுள்ளார் நெல்சன். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இரண்டு மகள்களையும் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் புதிய படத்துக்கான இயக்குனரை மாற்றி விடாமல் ஏதாவது செய்யுங்கள் என அனிருத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தொடர்ந்து இரண்டு மகள்களும் இயக்குனர் நெல்சனை மற்ற வேண்டாம், கண்டிப்பா அவர் இயக்கத்தில் உங்கள் படம் வெற்றி பெரும். என அஹோ..ஓஹோ…என நெல்சனுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் டென்ஷனான ரஜினி, இனிமேல் என்னுடைய் கதை விவகாரத்தில் நீங்கள் யாரும் தலையிட வேண்டாம் இது தான் உங்களுக்கு கடைசி, இது என்ன சிறிய பட்ஜெட் படமா.? என்னை நம்பி ஒருவர் பல கோடி முதலீடு செய்கிறார்.

உங்களுக்கு என்ன தெரியும் என ரஜினி கடுமையாக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அனிருத் குறித்தும் கடுமையாக ரஜினிகாந்த் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் தனது புதிய படத்தில் இயக்குனர் நெல்சனை மாற்றுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில். அடுத்து யாருக்கு வாய்ப்பு என்பதில் ஏற்கனவே ரஜினியிடம் கதை சொன்ன இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபீஸ்ட் பட விவகாரத்தால் அஜித்தை குறிவைத்த சன் பிக்சர்ஸ்.? அஜித் எடுத்த அதிரடி முடிவு !
Next articleமன்னார் கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் 81 கிலோ கேரள கஞ்சா மீட்பு