Home CRIME NEWS தாயின் தலையில் குத்தி கொலை செய்த மகன்!

தாயின் தலையில் குத்தி கொலை செய்த மகன்!

கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறப்பர் தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் தனது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் தலையில் இரும்பு கம்பியால் குத்தி இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த பெண்ணின் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், தெஹல்கமுவ, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமணமகள் ஓட்டம்; தங்கையை திருமணம் செய்த லண்டன் மாப்பிளை!
Next articleஆண்டுதோறும் 500 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கிறார்கள்! விபரம் வெளியானது