தளபதி 66 படத்தின் நடிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஷாம் அணியில் இணைந்த பிறகு, தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ், நடிகர்கள் பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் வம்ஷி பைடிபள்ளியுடன் இணைந்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக மே 8 அன்று அறிவித்தது. தற்போது தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Extremely delighted to welcome @actorsrikanth sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/U0eLPGJ2xe
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களை சமீபத்தில் அறிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் ஒரு நடிகரை அறிவித்துள்ளனர்.
அதன்படி ஸ்ரீகாந்த் என்ற தெலுங்கு நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் கடைசியாக வில்லனாக நடித்த அகண்டா திரைப்படம் அங்கு பெரிய வரவேற்ப்பை பெற்றது.
Happy to welcome @iYogiBabu onboard #Thalapathy66. @actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/O77ByOPbhD
— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022
மேலும் நடிகர் ஷாமும் இப்படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
தயாரிப்பு குழு இப்போது ஷாமையும் அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது. நடிகர் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார், மேலும் அவர் தனது சமூக ஊடகப் பக்கத்திலும் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். #தளபதி66 படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார், எஸ் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்