Home Cinema தளபதி 66 படப்பிடிப்பை உறுதி செய்த சரத்குமார் வெளியான அப்டேட் இதோ !!

தளபதி 66 படப்பிடிப்பை உறுதி செய்த சரத்குமார் வெளியான அப்டேட் இதோ !!

பீஸ்ட் படத்திற்கு பிறகு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. வம்சி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொள்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல். இவர் விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் கூட. வம்சியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார். தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (04.05.2022) தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதற்காக விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் விஜய் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரத்குமார் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஜிம்மில் தங்கியிருக்கும் சரத்குமார் கூறியதாவது: தளபதி66 படப்பிடிப்பு.