Home Cinema தலைவர் 169 அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!!! வைரலாகும் தகவல் இதோ

தலைவர் 169 அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!!! வைரலாகும் தகவல் இதோ

தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொட்டது. டான் திரைப்படமும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

ஒருபக்கம் நெல்சன் அடுத்து ரஜினியை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதை நெல்சனோ, சிவகார்த்திகேயனோ இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், இதுபற்றி ஒரு வார இதழுக்கு கொடுத்த பேட்டியில் ‘நாங்க என் சொந்த ஊருக்கு போயிருந்த போது என் பெரியம்மா ‘வாழ்த்துக்கள் தம்பி..தலைவர் படத்துல நடிக்கிறியாமே’ என கேட்டாங்க.. உங்களுக்கும் தெரிஞ்சிச்டுசா.. எனக்கு தெரியல பாருங்களே’ன்னு சொன்னேன்.

இதுவரை என்கிட்ட யாரும் கேட்கல. நெல்சனும் இதுவரை என்கிட்ட இத பத்தி பேசல. நானும் நெல்சன்கிட்ட கேட்கல.ஆனா, நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு..எங்க பெரியம்மா வரைக்கும் ரீச் ஆகியிருக்கு’ என பதிலளித்தார்.

எனவே,தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியானால் மட்டுமே தெரியவரும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஉதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் விமர்சனம் இதோ !!!
Next articleகவர்ச்சி காட்டியும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போன இளம் நடிகைகளின் லிஸ்ட் இதோ !!