சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய அறிமுகம் சொல்லிதான் தெரியவேண்டியதில்லை. கிட்டத்தட்ட திரையுலகில் இருந்த 40 ஆண்டுகளில் 30 வருடத்திற்கு மேலாக உச்சத்தில் இருக்கிறார். ஏன், தற்போதும் இளம் நடிகர்களுக்கு கடும் போட்டியாக இயங்கி வருகிறார்.
இவருக்கு 6 இல் இருந்து 60 வயதை கடந்தவர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் ஒன்று நிகழ்ந்து. அப்படி என்ன நடந்தது என்றால், அது அவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.
அந்த சமயம் அவருக்கு கிட்னி தானமாக கொடுத்தவர் சஞ்சய் எனும் நபராம். இவர் தான் ரஜினி வீட்டில் ஆல் இன் ஆல் என கூறப்படுகிறது. ரஜினிக்கு நெருக்கமான விவிஐபிகள் நம்பர் கூட இவரிடம் தான் இருக்குமாம். ரஜினியை யார் சந்திக்க வேண்டும் என்றாலும் இவரை தாண்டி தான் சந்திக்க முடியும் என்கிற நிலை.
அப்படி இருந்தவர் தான் சில மாதங்களாக ரஜினியை விட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ளாராம். அதற்கு பலவாறு காரணங்கள் பரவி வருகின்றன. ஏன், அண்மையில், கிரிக்கெட் வீரர் தோனி பட நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூட குறிப்பிட்டிருந்த சஞ்சய் இவர் தான் எனும் பேச்சும் எழுந்துள்ளது.
அவர் என்ன செய்தாலும் இருக்கட்டும், அதற்காக கிட்னி கொடுத்தவரையே இப்படி ஒதுக்கி வைக்கலாமா என சினிமாவாசிகள் கூறி வருகின்றனர். இந்த செய்தியை பிரபல சினிமா செய்திதளம் வலைப்பேச்சு எனும் சேனலில் விடியோவாக வெளியிட்டு இருந்தனர்.