டேட்டிங் ஆப் மூலம் கேரள பெண்ணிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய நைஜீரிய மனிதன் !!

  நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி (36) என்ற வாலிபர், கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் டேட்டிங் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஆர்வமாக பேசிய அவர், அவரை காதலிப்பதாக கூறி அவரது குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.

  இதையடுத்து தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், இந்தியா வந்ததும் கொண்டு வந்து தருவதாக கூறி ஆசையை தூண்டியுள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்து ரூ.1.50 கோடி பணம் எடுத்ததாக கூறினார். மேலும், டெல்லி விமான நிலைய அதிகாரிகள் பணத்தை எடுக்க அனுமதிக்கவில்லை என்றும், அதை பெற ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பெண் உடனடியாக அவர் கேட்ட பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

  இதனையடுத்து மேலும் 11 இலட்சம் ரூபாவை அந்த இளைஞன் கேட்டுள்ள நிலையில் சற்றும் யோசிக்காமல் சிறுமி வங்கிக்கு சென்று பணத்தை அனுப்ப முயற்சித்துள்ளார். சந்தேகமடைந்த வங்கி அதிகாரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியபோதுதான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

  இதையடுத்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்த நைஜீரிய இளைஞர், கேரள பெண்ணிடம் பேசி பணத்தை பறித்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து டெல்லி விரைந்துள்ள கேரள போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

  தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் எனுகா அரின்சி தனது குடும்பத்தினருடன் டெல்லியில் முகாமிட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல் பல பெண்களிடம் டேட்டிங் செய்து ஏமாற்றி பணம் பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Google News

  ஏனைய தளங்களிற்கு செல்ல..

  உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
  Previous articleஒரு பல்லூன் பெருசு இன்னொன்னு சிறுசு திருச்சி சாதனா வெளியிட்டுள்ள ஆபாச வீடியோ; ஷாக்கான ரசிகர்கள்..!
  Next articleஇன்றைய ராசிபலன் – 22/04/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.