Home Accident News டீசல் பெற்றுக் கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்து

டீசல் பெற்றுக் கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்து

கிளிநொச்சியில் டீசல் பெற்றுக்கொள்ள வந்த உழவு இயந்திரம் வாய்க்காலில் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி – கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவான உழவு இயந்திரங்கள் வருகை தந்திருந்தன.

இந்நிலையில், குறித்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் விழுந்துள்ளது.

அதனை மீட்பதற்கு விவசாயிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

டீசல் டீசல்