Home வவுனியா செய்திகள் டீசல் பதுக்கி வைத்த சிற்றி ஹாட்வெயார் சிக்கியது!

டீசல் பதுக்கி வைத்த சிற்றி ஹாட்வெயார் சிக்கியது!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்று (27) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிசார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றினை சோதனை செய்தனர். இதன்போது குறித்த ஹாட்வெயாரின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 பரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த 15 பரல்களில் காணப்பட்ட 3000 லீற்றர் டீசல்களும் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹாட்வெயாரின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்னள நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

டீசல் பதுக்கி வைத்த சிற்றி ஹாட்வெயார் சிக்கியது! டீசல் பதுக்கி வைத்த சிற்றி ஹாட்வெயார் சிக்கியது!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசவர்க்கார நுரையுடன் விளையாடிய சிறுமியை ஆத்திரமுற்று கூரிய ஆயுதத்தால் தாக்கிய தாய்!
Next articleமீண்டும் முடங்கும் இலங்கை!! இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்