Home Cinema சூர்யாவை வைத்து பெரிய ஸ்கெட்ச் போடும் லிஜெண்ட் சரவணா? போஸ்டரை பார்த்து கதறும்...

சூர்யாவை வைத்து பெரிய ஸ்கெட்ச் போடும் லிஜெண்ட் சரவணா? போஸ்டரை பார்த்து கதறும் சூர்யா ரசிகர்கள் !!

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையில் உரிமையாளரான அருள் சரவணா சில ஆண்டுகளுக்கு முன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்படத்திற்காக பல கோடி செலவில் தி லெஜெண்ட் என்ற படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளதல்லா உள்ளிட்டவர்கள் நடித்து வந்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அப்பாடல் வாடிவாசல் என்று பெயரில் வெளியாகவுள்ளது என்று போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் வாடிவாசலுக்கே டஃப் கொடுப்பாரோ என்று ஷாக்காகி வருகிறார்கள்.

சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள வாடிவாசல் படத்தை வைத்து கம்பேர் செய்தும் கருத்த்துகளால் திட்டி வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

சூர்யாவை வைத்து பெரிய ஸ்கெட்ச் போடும் லிஜெண்ட் சரவணா? போஸ்டரை பார்த்து கதறும் சூர்யா ரசிகர்கள் !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேர் மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் கைது!!
Next articleவிருமன் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்த கார்த்திக்