Home Cinema சூரியை நம்ப வைத்து கழுத்தை அறுத்தாரா வெற்றிமாறன் !! பீதியில் ரசிகர்கள்

சூரியை நம்ப வைத்து கழுத்தை அறுத்தாரா வெற்றிமாறன் !! பீதியில் ரசிகர்கள்

நடிகர் விஜய் சேதுபதி தனது 44வது பிறந்தநாளை ஜனவரி 16ஆம் தேதி கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நடிகருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஷூட்டிங் ஷெட்யூலை முடித்தார். அவர் இன்னும் பல திட்டங்களைக் கொண்டுள்ளார், சில ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘மாமனிதன்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

மதுரை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து சினிமா மீது கொண்ட மோகத்தினால் சென்னைக்கு வந்த சூரி, துணை நடிகராக சிறு சிறு வேடங்களில் சுமார் 20 படங்கள் வரை நடித்து, 11 வருடம் பசியால் வாடியும், கடுமையான போராட்டத்திற்கு பின்பு வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியின் நடித்து புகழ் பெற்று புரோட்டா சூரி என அழைக்கப்பட்டு காமெடி நடிகராக உருவெடுத்தவர் தான் நடிகர் சூரி.

வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வர தொடங்கிய சூரி, அடுத்த இரண்டு வருடத்தில், வடிவேலு மார்க்கெட் சரிந்து சினிமாவில் காணாமல் போக, வருடத்துக்கு சுமார் குறைந்தது பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியானார். 2011 முதல் 2019 வரை ஓய்வில்லாமல் நடித்து வந்த சூரி சினிமாவில் சம்பாரித்த பணத்தில் ஓட்டல் தொழிலை தொடங்கி, பல்வேறு கிளைகளை உருவாக்கினர்.

இப்படி கடுமையான போராட்டத்துக்கு பின்பு சினிமாவில் சாதித்து காட்டிய சூரிக்கு இயக்குனர் வெற்றிமாறன் ரூபத்தில் வந்தது மிக பெரிய சோதனை. காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என வெற்றிமாறன் தெரிவிக்க, ஆரம்பத்தில் இதெல்லாம் நமக்கு செட் ஆகாது பாஸ் என நழுவியுள்ளார் சூரி, ஆனால் வெற்றிமாறன் படத்தின் கதையை தெரிவித்து சினிமாவில் உங்களை இது அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.

பாஸ் ஹீரோவா நடித்தால் கால் சீட் அதிக நாட்கள் கொடுக்க வேண்டும், நம்மளுக்கு அடுத்தடுத்து படம் வந்து கொண்டே இருக்கு என சூரி மறுத்துள்ளார், ஆனால் வெற்றிமாறன் கால் சீட் அதிக நாட்கள் ஆகிறது என்று யோசிக்க வேண்டாம். இதற்கு பின்பு உங்களுக்கு ஹீரோ பட வாய்ப்புகள் குவியும், சம்பளமும் அதிகமாகும், பெயர் புகழும் கிடைக்கும் என ஆசையை வெற்றிமாறன் தூண்டியதாக கூறப்படுகிறது. இதன் பின்பு ஒரு வழியாக ஹீரோவாக ஒப்பு கொண்டுள்ளார் சூரி.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவானார் சூரி, ஆனால் இந்தப்படத்தினால் ஏகப்பட்ட நகைச்சுவை நடிகராக பட வாய்ப்புகளை இழந்தார் சூரி.படம் தொடங்கி சுமார் இரண்டு வருடகளாக போகிறது இன்னும் திரைக்கு வரவில்லை விடுதலை படம், மேலும் இந்த படத்தில் தீடிரென விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்துள்ளார். குறுகிய காட்சிகள் மட்டும் தான் விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல் வெளியானது.

ஆனால் இன்னும் 30 நாட்கள் விஜய் சேதுபதியை வைத்து வெற்றிமாறன் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியான பின்பு தான் தெரியும் இந்த படத்தின் ஹீரோ சூரி கிடையாது, விஜய் சேதுபதி என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இப்படி தன்னை ஹீரோ என்று ஆசை காட்டி மோசம் செய்துவிட்டார் வெற்றிமாறன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சூரி புலம்பி தவித்து வருவதாக கூறப்படுகிறது.

எல்ரெட் குமாருக்கு சொந்தமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம், ‘விடுதலை’ படத்திற்காக விஜய் சேதுபதியின் தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை வெளியிட்டது. இது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தமிழ்த் திரைப்படமாகும்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபிஸ்ட்பட விவகாரதால் நள்ளிரவில் பிரபல தயாரிப்பாளரை மிரட்டினாரா விஜய் ! அவரே கூறிய அதிர்ச்சி உண்மை இதோ
Next articleறம்புக்கனை சம்பவம்:மூன்று பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்