அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பாரியளவிலான ஆதாரங்கள் நாசமாகி உள்ளதாக தெரிவிக்கின்றார்.
பல்வேறு நபர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகளும் சேற்றில் சிதறிக் கிடந்ததாக அதிகாரி தெரிவித்தார்.
உடல் கண்டெடுக்கப் பட்டவுடன், புதரை அகற்றிக்கொண்டிருந்தவர்களும், செய்தி அறிந்த ஏராளமான கிராம மக்களும் பல்வேறு இடங்களில் இருந்து புதருக்குள் நுழைந்து உடலைப் பார்க்க வந்ததாக அதிகாரி கூறினார்.
இதன்காரணமாக சிறுமியின் உடலை தடயவியல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மட்டுமே மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
இதேவேளை, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், ஆயிஷாவும் அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்த போது, இரவுவேளையில் வீட்டுக்குள் புகுந்து பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.