மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வரும் நட்சத்திரங்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அப்படி ராஜா ராணி, விசுவாசம், காலா படம் உட்பட சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் சாக்ஷி அகர்வால்.
சமீபத்தில் டெட்டி, அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்திருப்பார். 2019 நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார். அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகி வந்த சாக்ஷி முக்கிய ரோல் எந்த படத்திலும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
இதற்கு க்ளாமர் போட்டோஷூட்டும் எடுத்து ரசிகர்களை கவர்ந்தும் வந்தார். தற்போது வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார்.
பிரபல தொலைக்காட்சியில் மக்கள் மனதை ஈர்த்து வரும் கண்ணான கண்ணே சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். சீரியலின் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.