Home Local news சமைத்துக்கொண்டிருந்தவர் எரிந்து ஸ்தலத்திலேயே பலி!

சமைத்துக்கொண்டிருந்தவர் எரிந்து ஸ்தலத்திலேயே பலி!

லிந்துலை பொலிஸ்     பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றில், சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக லிந்துலை ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலியான நபர் லெம்லியர் தோட்டத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த தீ விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன்,
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.