Home Cinema சக்கையா சப்பையா பீஸ்ட் படத்தின் விமர்சனம் இதோ !!

சக்கையா சப்பையா பீஸ்ட் படத்தின் விமர்சனம் இதோ !!

Beast Movie review : 2022ஆம் ஆண்டு கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘பீஸ்ட் ’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

beast

நடிகர் விஜய்க்காக வித்தியாசமான தளபதி விஜய் டைட்டில் கார்டில் இருந்தே ரசிகர்களை கொண்டாட வைத்து விடுகிறார் இயக்குநர் நெல்சன்

Beast

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம்.

Beast vijay

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி பிளஸ் ஆக்‌ஷனை கொடுத்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார். பீஸ்ட் படம் எப்படி இருக்கு என்பதை இங்கே விரிவாக அலசுவோம்.

Beast

ராஜஸ்தானின் ஜோத்பூரில் படம் ஆரம்பிக்கிறது. குழந்தையின் பலூன் ஒன்று அதன் கையை விட்டு பறக்க வீரராகவன் என்ட்ரி கொடுத்து அந்த பலூனை பிடித்து குழந்தையின் கையில் கொடுக்கிறார் விஜய். அங்கே திடீரென நடக்கும் பயங்கரவாத தாக்குதலில் எதிரிகளை பறந்து பறந்து பந்தாடுகிறார் விஜய். ஸ்னைபர் கன் எடுத்து பயங்கரவாதி ஒருவரின் காரை சுட்டு வீழ்த்தும் போது, நடிகர் விஜய் எந்த குழந்தையை சிரிக்க வைத்தாரோ அந்த குழந்தை இறந்து விடுகிறது. வீரராகவன் விரக்தி அடைந்து அப்செட் ஆகும் இடத்தில் பீஸ்ட் டைட்டிலை போட்டு படத்தை ஆரம்பிக்கும் இடத்திலேயே இயக்குநர் நெல்சன் கைதட்டல்களை பெறுகிறார். துப்பாக்கி படத்திலும் பஸ் பாம் பிளாஸ்ட்டின் போது விஜய் பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றாமல் விட்டதை நினைத்து ஃபீல் பண்ணுவார் (அதுதானடா.. அதேதான்).

Beast vijay movie

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை போலவே பீஸ்ட் படத்திலும் காமெடிக்கு பஞ்சமே இல்லை. அந்த குழந்தை இறந்ததும் ராணுவத்தின் மீதே நம்பிக்கை இழந்து RAWல் இருந்து வெளியேறுகிறார் விஜய். விடிவி கணேஷ் நடத்தும் டாமினிக் செக்யூரிட்டி சர்வீஸில் பூஜா ஹெக்டே ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். விடிவி கணேஷ் மற்றும் பூஜா ஹெக்டே காம்போவில் காமெடி ரொம்ப நல்லாவே வொர்க்கவுட் ஆகி உள்ளது. வீரராகவன் அந்த செக்யூரிட்டி சர்வீஸில் பணியாற்ற வருகிறார்.

சென்னையில் உள்ள பிரம்மாண்ட மாலுக்கு செக்யூரிட்டி சர்வீஸ் கொடுக்கும் காண்ட்ராக்ட் விடிவி கணேஷுக்கு கிடைக்க, அவரோட டீம் அங்கே செல்கிறது. அந்த நேரத்தில் அந்த மால்-ஐ பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர். பயங்கரவாதி ஒருவரை விடுவித்தால் தான் இங்கே உள்ள மக்களை உயிரோடு விடுவோம் என பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். வீரராகவனும் அங்கே அவர்களுடன் பிணையக் கைதியாக உள்ளார். யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி பண்ணும் காமெடியை விட விடிவி கணேஷ் இந்த படத்தில் தனக்கே உரிய பாணியில் காமெடி பண்ணி ஸ்கோர் செய்கிறார்.

Beast

அல்தாஃப் உசைன் எனும் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக மனுஷன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். சாணிக் காயிதம் படத்திற்கு முன்பாகவே செல்வராகவனை திரையில் பார்த்த ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தில் என்ன ட்விஸ்ட் இருக்கப் போகுது என்பதை கவனித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் தான் இயக்குநர் நெல்சன் என்பது அனைவருக்கும் தெரியும். ஃபேன் பாயாகவே இந்த படத்தை இயக்கி இருக்கிறார் நெல்சன். போக்கிரி படத்தில் இடியே விழுந்தாலும் பெரிய அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத கதாபாத்திரம் தான் வீரராகவன் கதாபாத்திரம். அதே போல இன்டர்வெல் பிளாக்கில் வரும் “ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன்” காட்சி ரசிகர்களை அட போட வைக்கிறது.

thalapathy 66

பீஸ்ட் படத்தின் பிளஸ் என்று பார்த்தால் இயக்குநர் நெல்சனின் டைமிங் காமெடி சென்ஸ் தான். தெரிந்த கதை தான் என்றாலும், அதை ஸ்க்ரீன்பிளே செய்த இடத்தில் அசத்தி உள்ளார் நெல்சன். நடிகர் விஜய்யின் வெறித்தனமான நடிப்பு, எனர்ஜி, ஃபிட்னஸ் என ஆக்‌ஷன் காட்சிகளை நம்பும் அளவுக்கு இருக்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. கிரணின் மால் செட் பிரம்மிக்க வைக்கிறது. எடிட்டிங் இன்னும் சற்றே க்ரிஸ்ப்பியாக இருந்திருக்கலாம். அனிருத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் தான் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்லலாம்.

Beast

பீஸ்ட் வீரராகவன் பல இடங்களில் போக்கிரி தமிழை ஞாபகப்படுத்துவது படத்தின் மைனஸ் ஆகவே தெரிகிறது. ஆனால், மாஸ்டர் படத்தில் கில்லி எஃபெக்ட்டை ரசிகர்கள் கொண்டாடியதை போலவே வீரராகவனின் மேனரிஸத்தையும் கொண்டாடுகின்றனர். பயங்கரவாதிகளில் ஒருவனாக இருக்கும் டாம் ஷைன் சாக்கோ வில்லனாக மிரட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரே விஜய்க்கு உதவுவது செம ட்விஸ்ட்டாக இருந்தாலும், படத்தை நகர்த்த வைத்ததை போலவே உள்ளது.

பீஸ்ட் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருந்தால் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படம் சந்தோஷப்படுத்தி இருக்காது. ஏற்கனவே எதிர்பார்த்ததை போலவே டாக்டர் படத்தைத் தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் சீரியஸான சீன்களுடன் டார்க் காமெடியை வைத்து இயக்குநர் நெல்சன் நிறைய மதிப்பெண்களுடன் ஜஸ்ட் பாஸ் ஆகிவிட்டார்.

beast

எதிர் பார்த்த அளவுக்கு படத்தில் ஒன்றும் இல்லையே என்பதே உண்மை .நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மிருகம்’. படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.