Home Local news கோட்டா தப்பியோட முயன்றாரா? மத்தளை அதிகாரிகள் அதிரடி தீர்மானம்

கோட்டா தப்பியோட முயன்றாரா? மத்தளை அதிகாரிகள் அதிரடி தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டுக்கு முத்திரையிட கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் நுழைவாயில் கடமையாற்றிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மறுத்தமையால் இலங்கையிலேயே அவர் சிக்கிக் கொண்டார் என்று ஏ.எஃப்.பி செய்திச் சேவை, இன்று (12) செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செவ்வாக்கிழமை (12) பட்டுப்பாதை நுழைவாயில் ஊடாக டுபாய்க்கு பயணிக்க இருந்தார் என்றும் விமான நிலைய ஊழியர்களுடனான அவமானகரமான மோதலை அடுத்து சொந்த நாட்டிலேயே அவர் சிக்கிக் கொண்டார் என்று ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சனிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டா தப்பியோட முயன்றாரா? மத்தளை அதிகாரிகள் அதிரடி தீர்மானம்

தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காகவும் தடுத்து வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் பதவி விலகுவதற்கு முன்னர் வெளிநாடு செல்ல விரும்புவதாக நம்பப்படுகிறது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் முத்திரையிட மறுத்ததையடுத்து, ஏனைய விமான நிலைய பயணிகளின் பழிவாங்கலுக்கு பயந்து பொதுவான வழியாக செல்ல மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டதாகவும் ஏ.எஃப்.பி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லக்கூடிய நான்கு விமானங்களைத் தவறவிட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் இரவைக் கழித்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்தளை, ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் சேவையில் கடமையாற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் இன்று பிற்பகல் முதல் கடமையிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

மத்தளை விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்த காரணத்தாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அரசியல் பிரமுகர்கள், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய முக்கிய பிரமுகர் சேவையில் கடமையாற்றும் அதிகாரிகள் தமது கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கம், இன்று (12) தெரிவித்தது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் பட்டுப்பாதை (சில்க் ரூட்) நுழைவாயில் பணிகளில் இருந்து, இன்று (12) நள்ளிரவு 12 மணிமுதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை விலக தீர்மானித்துள்ளதாக சங்கம் அறிவித்தது.

இன்று (12) அதிகாலை டுபாய் நோக்கி செல்லவிருந்த விமானத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை நுழைவாயிலுக்கு வருகைதந்துள்ளார்.

இதனையடுத்து, அவர் வெளியேறுவதற்கு முத்திரையிட மறுத்துள்ள அங்கிருந்த அதிகாரிகள் கடமைகளில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளனர்.

அதன்பின்னர் சாதாரண பயணிகள் செல்லும் பகுதியூடாக நாட்டை விட்டு வெளியேற பசில் முயன்ற போது, மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவின் மூலம் தெரியவந்தது. அதன்பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் விமான நிலையத்தில் இருந்து திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅமெரிக்கா ஆசையும் பறிபோனது!! கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா
Next articleகோண்டாவில் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளை – பத்து பேர் கைது!