Home Tamil News கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல்!! மாளிகையை மட்டுமின்றி செயலகத்தையும் இழந்தார் கோட்டா

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல்!! மாளிகையை மட்டுமின்றி செயலகத்தையும் இழந்தார் கோட்டா

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இரண்டிலும் இலங்கை எதிர்ப்பாளர்கள் நுழைந்துள்ளனர். அவ்விரு இடங்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கவில்லை.

இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக​வும் போராட்டக்காரர்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அங்கும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது,

இதேவேளை, அதிசொகுசு வாகன பேரணியொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளி வந்த நிலையில் உள்ளது.

குறித்த வாகனப் பேரணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வாகனப் பேரணியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதேவேளை, நிலைமைதொடர்பில் கலந்துரையாடி அவசரமான தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஉக்கிரமடையும் போராட்டகளம்!! 33 பேர் வைத்தியசாலையில்!! நாலாபுறமும் கொழும்பை சுத்தி வளைக்கும் மக்கள்: திணறும் இராணுவம்
Next articleஇரண்டு கப்பல்களில் வெளியேறியவர்கள் யார்? 54 ரயில்கள் கொழும்பை வந்தடைந்தன