அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கவுள்ளார்.
சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூட விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த தகவலை நாம் பார்த்திருந்தோம். அந்த வரிசையில் தற்போது நடிகர் அஜித்தின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அஜித்தின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 350 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள AK 62 படத்திற்காக ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது