Home Local news கொழும்பில் மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்: பொலிஸார் குவிப்பு

கொழும்பில் மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்: பொலிஸார் குவிப்பு

அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி மீது கொழும்பு – கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சைத்தியம் வீதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, முதலிகே மாவத்தை ஆகிய பகுதிகளில் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபஸ்ஸில் யன்னலால் எட்டி பார்த்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Next articleஒல்லி இசையமைப்பாளருக்கும் கீர்த்தி சுரேஷ்க்கும் திருமணமா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!