Home Local news கொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலக பகுதியில் சற்றுமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவ வீரரொருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞர் நோயாளர்காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை! சரமாரியாக துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் மீது துப்பாக்கிச்சூடு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினிக்கு நேர்ந்த கதி
Next articleஐரிஎன், வசந்தம் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகளும் இடை நிறுத்தம்!