Home Cinema கைவிட்ட சிவகார்த்திகேயன் கவ்விக்கொண்ட அஜித் !! நடந்து என்ன ? வைரலாகும் தகவல் இதோ !!

கைவிட்ட சிவகார்த்திகேயன் கவ்விக்கொண்ட அஜித் !! நடந்து என்ன ? வைரலாகும் தகவல் இதோ !!

அஜித்குமார் தற்போது ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார், இது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் உள்ள பிரமாண்டமான அண்ணாசாலை செட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வங்கி கொள்ளை திரில்லர் என்றும், ஆக்‌ஷன் கலந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

படத்தை பார்த்தவர்கள் விக்னேஷ் சிவனை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கதைனு படம் பண்ணியிருக்கீங்களே விக்னேஷ் சிவன். உங்களை பார்த்து பாவமாகவும், கோபமாகவும் இருக்கிறது என்கிறார்கள்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு வேறு ஒரு கவலை வந்துவிட்டது. அஜித்தின் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. அப்படி என்றால் ஏ.கே. 62 கதை எப்படி இருக்குமோ என்பதே அஜித் ரசிகர்களின் பயம்.

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நண்பர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்தவர்களோ, சிவகார்த்திகேயன் ரொம்ப தெளிவு. விக்னேஷ் சிவனை பற்றி தெரிந்து தான் எஸ்கேப் ஆகிவிட்டார். அஜித் பாவம் சிக்கிவிட்டார் என்கிறார்கள்.

இதற்கிடையில், சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், அஜீத் குமாருடன் தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய சிறுத்தை சிவா, ‘AK63’ படத்தை இயக்கத் தயாராக இருக்கிறார், மேலும் தயாரிப்பு சன் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத்தும் சிவாவும் தங்களின் நான்காவது படத்திற்காக மீண்டும் இணைவார்களா? இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்போம்.