Home Local news குடி போதையில் வேனை செலுத்தி வீதியோரத்தில் நின்றிருந்த தந்தை மற்றும் மகளை மோதிய சாரதி… தந்தை...

குடி போதையில் வேனை செலுத்தி வீதியோரத்தில் நின்றிருந்த தந்தை மற்றும் மகளை மோதிய சாரதி… தந்தை பலி

முலட்டியான – கம்புருபிட்டிய பிரதான வீதியின் மாகந்துர பகுதியில் வீதிக்கு அருகில் நின்றிருந்த தந்தை மற்றும் அவரது சிறிய மகளை வேன் ஒன்று மோதியதில் தந்தை உயிரிழந்துள்ளார்.

இன்று (07) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், மாகந்துர, பாரகம வடக்கு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரான ஒரு பிள்ளையின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது மூன்று வயது மகளுடன் தனது வீட்டின் முன் வீதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது முலட்டியானவிலிருந்து மாத்தறை நோக்கி வேகமாக வந்த வேன் ஒன்று அவர்கள் மீது மோதியதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய லொறி மீதும் மோதியுள்ளது.

பெங்கமுவா பிரதேசத்தில் திருமண விருந்தொன்றில் இருந்து வேன் வந்து கொண்டிருந்ததாகவும், வேன் சாரதி குடிபோதையில் இருந்ததாகவும் மாவரல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர், பிரதேசவாசிகளின் தலையீட்டில் தந்தையும் மகளும் கம்புருபிட்டி ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தந்தை உயிரிழந்ததுடன் , ஆபத்தான நிலையில் இருந்த மகள் கராப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவரல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடி போதையில் வேனை செலுத்தி வீதியோரத்தில் நின்றிருந்த தந்தை மற்றும் மகளை மோதிய சாரதி... தந்தை பலி குடி போதையில் வேனை செலுத்தி வீதியோரத்தில் நின்றிருந்த தந்தை மற்றும் மகளை மோதிய சாரதி... தந்தை பலி குடி போதையில் வேனை செலுத்தி வீதியோரத்தில் நின்றிருந்த தந்தை மற்றும் மகளை மோதிய சாரதி... தந்தை பலி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசுகாதாரத்துறையினருக்கு நாளை எரிபொருள் இல்லை
Next article11 Free Apps like Facetune 2022 (Android & iOS)