Home Local news கிண்ணியா நகர சபையின் அதிகாரம் கைமாறியது

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் கைமாறியது

கிண்ணியா நகர  சபையின் புதிய தவிசாளராக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் முகமது முஸ்தபா முஹம்மது நிவாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக  தவிசாளர் பதவி வரிதாக்கப்பட்ட நிலையில் இருந்த கிண்ணியா நகர  சபைக்கான  புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக சபை, ( 20) கூடிய போதே, இவர் தெரிவு செய்யப்பட்டார்.

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் கைமாறியது

13 பேர் கொண்ட இந்தச் சபையில், இன்றைய தலைவர் தெரிவின் போது, 13 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். இதில்  புதிய தவிசாளருக்கு 6 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட அய்யூப் சப்ரின்  3 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  ஓர் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளரும்  வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் கைமாறியது

கடந்த நான்கு ஆண்டுகளாக  ஐக்கிய தேசியக் கட்சியின்  அதிகாரத்தில் இருந்த கிண்ணியா நகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த டிசெம்பர் மாதம்  இருமுறை சமர்பிக்கப்பட்ட போதும், இரு முறையும் தோற்கடிக்கப்பட்டது.

இதன் காரணமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப, புதிய தவிசாளருக்கான தெரிவு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநீச்சல் உடையில் ஜான்வி கபூர்!
Next articleகொரோனா மரணங்கள் அதிகரிப்பு