இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் . இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. 2 வாரங்கள் ஆகியும் படம் இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.
இந்த படத்தில் நயன்தாரா நடித்த கண்மணி கதாபாத்திரத்தை விட சமந்தா நடித்த கதீஜா நடித்த கதாபாத்திரத்தில் பெரிதளவில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் மூலம் சமந்தாவின் மார்க்கெட் மிகவும் உயர்ந்துவிட்டது என்றே கூறவேண்டும்.
இந்த நிலையில், இந்த படத்திற்காக நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த ஒரு புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை சமந்தா 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த படத்தை தொடர்ந்து வரும் படங்களுக்கு இன்னும் அதிகமாக சம்பளம் வாங்குவர் என்கிறது கோலிவுட் வட்டாரம்.